இடைநடுவே பிக்பொஸ் வீட்டுக்குள் செல்லும் பிரபலம்!

Tuesday, 12 October 2021 - 19:40

%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%21
தமிழ் பிக்பொஸ் நிகழ்ச்சியின் 5ஆவது சீசன் ஒக்டோபர் 3ஆம் திகதி ஆரம்பமானது.

இதில் மொத்தமாக 18 பேர் கலந்துகொண்டனர்.

முதல் வார இறுதியில் திருநங்கை நமீதா மாரிமுத்து, மருத்துவ காரணங்களுக்காகத் திடீரென வெளியேறினார்.

அதுமட்டுமின்றி முதல் வாரத்தில் எவறும் வௌியேறாததால் தற்போது 17 போட்டியாளர்கள் உள்ளனர்.

வழக்கமாகப் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடைநடுவில் போட்டியாளர்கள் கலந்துகொள்வது வழக்கம்.

40 அல்லது 50 நாட்கள் கடந்த பின்னரே இடைநடுவில் போட்டியாளர்கள் பிக்பொஸ் வீட்டுக்குள் அனுப்பப்படுவார்கள்.

ஆனால் தற்போது முதல் வாரத்திலேயே நமீதா மாரிமுத்து வெளியேறியதால், அவருக்குப் பதில் ஒரு போட்டியாளரை உள்ளே அனுப்ப உள்ளதாகத் தகவல்கள் வௌியாகியுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 16ஆம் திகதி நடிகை ஷாலு ஷம்மு இடைநடுவில் பிக்பொஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளன.

இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து போன்ற படங்களில் நடித்துப் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No description available.


Exclusive Clips