ஜோதிகாவின் 50 ஆவது திரைப்படத்துக்கு வாழ்த்து தெரிவித்து மணல் சிற்பம்

Thursday, 14 October 2021 - 19:58

%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+50+%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
சசிகுமார், சமுத்திரகனியுடன் ஜோதிகா நடித்துள்ள உடன்பிறப்பே திரைப்படம் இன்று ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
 
ஜோதிகாவின் 50 ஆவது படமான இந்த திரைப்படத்துக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மணல் சிற்பக் கலைஞர் ஒருவர் ஜோதிகாவின் உருவத்தை மணல் சிற்பமாக வடித்துள்ளார்.
 
ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
 
திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த அவர் ‘36 வயதினிலே’ படத்தின் மூலம் சினிமாவுக்குள் மீள் பிரவேசம் செய்தார். 
 
கடந்த சில ஆண்டுகளாகக் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். 
 
இந்நிலையில்  இன்று அமேசன் ஓடிடி தளத்தில் வெளியான ‘உடன்பிறப்பே’ திரைப்படத்துக்கு வாழ்த்துகள் தெரிவிக்கும் வகையில் சென்னை மெரீனா கடற்கரையில் ஜோதிகாவின் மணல் சிற்பம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. 
 
அதில் ஜோதிகாவின் புகைப்படத்துடன்  வாழ்த்துக்கள் ‘ஜோதிகா 50’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
Image


Exclusive Clips