பிரிக்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார் தனுஷ்

Monday, 29 November 2021 - 15:10

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D
இந்தியா, கோவாவில் 6 ஆவது பிரிக்ஸ் திரைப்பட விழா, 52 ஆவது சர்வதேசத் திரைப்பட விழாவுடன் இணைந்து அண்மையில் நடத்தப்பட்டது.

இதில் சிறந்த நடிகருக்கான விருது 'அசுரன்'  திரைப்படத்துக்காக நடிகர் தனுஷுக்கு வழங்கப்பட்டது.

ஏற்கெனவே, இந்தப் படத்திற்காக அவர் தேசிய விருதையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விருது குறித்து ட்விட்டர் தளத்தில், “ஒரு முழுமையான மரியாதை” என தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.

'ஒன் வீல்ஸ்' என்ற பிரேஸில் திரைப்படத்தில் நடித்த லாரா போல்டோரினி சிறந்த நடிகைக்கான பிரிக்ஸ் விருதைப் பெற்றார்.

'பராகத்' என்ற தென்னாப்பிரிக்கத் திரைப்படமும், 'தி சன் எபவ் மீ நெவர் செட்ஸ்' என்ற ரஷ்யத் திரைப்படமும், சிறந்த திரைப்படத்திற்கான விருதைப் பகிர்ந்து கொண்டன.

பிரேஸிலைச் சேர்ந்த இயக்குநர் லுசியா முராத், 'அனா' என்ற ஆவணப் படத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்றார்.

'எ லிட்டில் ரெட் பிளவர்' என்ற சீனப் படத்தை இயக்கிய இயக்குநர் யொன் ஹான் சிறப்புப் பரிந்துரை விருது பெற்றார்.

பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்ரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய சர்வதேச கூட்டமைப்பு 'பிரிக்ஸ்' என அழைக்கப்படுகிறது.

இந்தக் கூட்டமைப்பின் சார்பில் பிரிக்ஸ் திரைப்பட விழா 2016 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.

இதில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் படங்கள் திரையிடப்பட்டு விருதுகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Image







Exclusive Clips