தளபதி 67 இல் சஞ்சய் தத் உடன் முக்கிய நடிகர்கள் களத்தில்!

Wednesday, 01 February 2023 - 11:00

%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+67+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%21
தளபதி 67 படத்தில் நடக்கவுள்ள பிரபல நடிகர்கள் தொடர்பான விபரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன.

வாரிசு படத்திற்கு பின்னர், நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் - விஜய் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளனர்.

விஜயின் 67 ஆவது படமாக இது உருவாகிறது. கடந்த ஜனவரி 2 ஆம் திகதி முதல் படப்பிடிப்பு ஆரம்பமான நிலையில் சென்னையில் ஒருக்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்தது.

இந்த நிலையில், இன்று முதல் காஷ்மீரில் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது. இதற்காக விஜய், லோகேஷ், திரிஷா, பிரியா ஆனந்த் உள்ளிட்ட படக்குழுவினர் தனி விமானம் மூலம் காஷ்மீர் சென்றுள்ளனர்.

நேற்றுமுன்தினம் முதல் இந்த படம் தொடர்பான அப்டேட்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் இசையமைப்பாளராக அனிருத், சண்டை இயக்குனர்களாக அன்பறிவு உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு வந்தது.

இந்த நிலையில், நேற்று (31) படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அறிவித்தனர்.

அந்தவகையில் பொலிவூட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், நடன இயக்குநர் சாண்டி, இயக்குனர் மிஷ்கின், நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர் கௌதம் மேனன், நடிகர் மேத்யூ தோமல் மற்றும் நடிகர் அர்ஜூன் உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெயரிடப்பட்டாத 'தளபதி 67' படம் மூலம் முதன்முறையாக சஞ்சய் தத் தமிழில் அறிமுகமாகின்றமை குறிப்பிடத்தக்கது.







Exclusive Clips