வெங்கட் பிரபுவுடன் இணையும் விஜய்?

Monday, 15 May 2023 - 17:51

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%3F
நடிகர் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இத்திரைப்படம், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் திரைக்கு வரவுள்ளதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், விஜய்யின் அடுத்த திரைப்பட இயக்குநர் பற்றிய தகவல் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இதன்படி, விஜய்யின் அடுத்த திரைப்படத்தை( தளபதி - 68) வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.







Exclusive Clips