மாமன்னன்’ படத்தின் முதல் பாடல் வெளியாகும் திகதி அறிவிப்பு

Wednesday, 17 May 2023 - 13:58

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D%E2%80%99+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
மாமன்னன்’ படத்தின் முதல் பாடல் எதிர்வரும் 19 ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' படத்தை இயக்கியுள்ளார்.

இதில் உதயநிதி ஸ்டாலினுடன் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பிந்தைய தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதையடுத்து இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் அண்மையில் வெளியானது.

இந்த நிலையில், 'மாமன்னன்' திரைப்படத்தில் நடிகர் வடிவேலு பாடல் ஒன்றை பாடியுள்ளதாகவும் விரைவில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளதாகவும் படக்குழு முன்னதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், 'மாமன்னன்' படத்தின் முதல் பாடல் எதிர்வரும் 19 ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'வைகைப்புயல்' வடிவேலு இப்பாடலை பாடியுள்ளார்.










Exclusive Clips