நடிகர் சரத்பாபு காலமானார்!

Monday, 22 May 2023 - 15:38

%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81++%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%21
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகர் சரத்பாபு தமது 71ஆவது வயதில் இன்று(22) காலமானார்.

முன்னதாக கடந்த மே 3ஆம் திகதி, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மரணமானதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின.

இதனையடுத்து, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் இரங்கலைப் பகிரத் தொடங்கியபோது, ​​​​அவரது குடும்பத்தினர் அவரது மரணம் குறித்த வதந்திகளை மறுத்து, அவர் குணமடைந்து வருவதாகக் கூறினர்.

எனினும், ஆரம்பத்தில் அவரது உடல்நிலை சீராக இருந்த போதிலும் அவர் இன்றைய தினம் காலமானதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த மாத தொடக்கத்தில், ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரத்பாபு மருத்துவமனையில் வென்டிலேட்டரில் உதவியில் சிகிச்சை பெற்றுவந்தார்.

நடிகர் சரத் பாபு 1973ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார், பின்னர் தமிழில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'நிழல் நிஜமாகிறது' திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.

இவர் தமிழில் கடைசியாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாபி சிம்ஹா நடித்த 'வசந்த முல்லை' படத்தில் நடித்தார்.

இவர் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாமலை' மற்றும் 'முத்து' போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்

ஆந்திராவின் அமடலாவலசாவில் பிறந்த சரத்பாபுவின் இயற்பெயர் சத்தியநாராயண தீட்சித் ஆகும்.Exclusive Clips