உலகின் மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கும் போட்டி

Sunday, 24 June 2018 - 14:33

%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+
'“Raid Amazones” என பெயரிடப்பட்டுள்ள பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் உலகின் மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கும் போட்டி இடம்பெறவுள்ளது.

இந்த விளையாட்டு நிகழ்வுகள் இரண்டு கட்டங்களாக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையிலும், மீண்டும் அடுத்த வருடம் மார்ச் மாதம் 23 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த போட்டிகள் கிழக்கு மாகாணத்தில் உள்ள பாசிக்குடா, கல்குடாவை சூழ்ந்த பிரதேசங்கள் மற்றும் தொப்பிகலை காட்டு பகுதிகளில் நடைபெறவுள்ளன.

சைக்கில் ஓட்டம், படகு செலுத்துதல், ஓட்ட போட்டிகள், வில்வித்தை, வரைபடத்தின் உதவியுடன் குறித்த இடத்தை சென்றடைதல் போன்ற பல்வேறு புதுமையான போட்டிகள் அதில் அடங்குகின்றன.

போட்டியாளர்களின் செயல்திறன், திடமான தன்மை மற்றும் குழுவாக செயல்படும் திறமைகளை பரிசோதிக்கும் வகையில் இந்த போட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த போட்டிகளில் உலகளாவிய ரீதியாக 500 முதல் 600 பெண்கள் பங்குகொள்ளவுள்ளனர்.

வருடா வருடம் நடைபெறும் இந்த போட்டிகள் முதன் முறையாக பாரிய அளவில் இலங்கையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் கடந்த 2004 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் இந்த வகையான போட்டிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.