லியோனல் மெஸ்ஸிக்கு 3 மாத போட்டித் தடை ..

Saturday, 03 August 2019 - 13:12

+%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81++3+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88+..
ஆர்ஜண்டீனா கால்பந்து அணியின் தலைவர் லியோனல் மெஸ்ஸிக்கு,  தென் அமெரிக்க கால்பந்து சம்மேளனத்தினால் 3 மாத போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்காவின் கோபா அமெரிக்கா ஊழிய  கால்பந்து தொடர் மோசடியானது என கருத்து தெரிவித்ததை அடுத்து மெஸ்ஸிக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த தினம் நிறைவடைந்த போட்டியில் சிலியை வீழ்த்திய ஆர்ஜண்டீனா அணி, மூன்றாம் இடத்தைப் பெற்றது.

இந்தப் போட்டியின்போது மெஸ்ஸி சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இதையடுத்து, கருத்து தெரிவித்திருந்த அவர், ப்ரேஸிலுக்கு வெற்றியளிக்கும் வகையில் இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன் காரணமாக, மெஸ்ஸிக்கு 3 மாதம் சர்வதேச கால்பந்து போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது.

அத்துடன், 50 ஆயிரம் அமெரிக்க டொலர் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த போட்டித்தடை காரணமாக, சிலி, மெக்ஸிகோ மற்றும் ஜேர்மனி முதலான நாடுகளுடன் எதிர்வரும் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் இடம்பெறவுள்ள நட்புரீதியான போட்டிகளில் மெஸ்ஸிக்கு பங்கேற்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொழில்முறை கிரிக்கட்டில் இருந்து இந்த ஓய்வு..!
Friday, 03 July 2020 - 20:08

இங்கிலாந்து அணியின் முன்னாள் விக்கட் காப்பாளர் ரிம் அம்புரூஸ்,... Read More

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள இங்கிலாந்து கிரிக்கட் வீரர்..!
Friday, 03 July 2020 - 13:52

இங்கிலாந்து கிரிக்கட் அணியின் சகலதுறை வீரர் சேம் கரன் சுய... Read More

இங்கிலாந்து தொடரில் இணைந்த ஷனன் கேப்றியல்
Friday, 03 July 2020 - 12:57

இங்கிலாந்து அணிக்கு டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்திய அணி குழாமில்... Read More