மூன்றாம் நாள் ஆட்டம் இன்று

Friday, 16 August 2019 - 8:00

%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் கிரிக்கட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.

நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவடையும் போது, தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி, ஒரு விக்கட்டை இழந்து 30 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
 
முன்னதாக இங்கிலாந்து இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 258 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

இதேவேளை, இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாம் டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.

இந்தபோட்டியில் முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய நியுசிலாந்து அணி, 249 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது.

அகில தனஞ்சய 5 விக்கட்டுகளையும், சுரங்க லக்மல் 4 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.

இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் 7 விக்கட்டுகளை இழந்து 227 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் உள்ளது.