7 விக்கட்டுக்களினால் வெற்றி...

Thursday, 19 September 2019 - 9:03

7+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF...
தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெற்ற 2ஆவது 20க்கு 20 போட்டியில் இந்திய அணி 7 விக்கட்டுக்களினால் வெற்றிபெற்றது.

மொஹாலியில் நேற்றிரவு இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து 150 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இந்திய அணி 19 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

இந்திய அணி சார்பில் அணித் தலைவர் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்களை அதிகூடுதலாக பெற்றுக்கொடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட 20 க்கு 20 தொடரில் இந்திய அணி 1க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.

இதேவேளை ஸிம்பாப்வே அணிக்கு எதிரான 20க்கு 20 போட்டியில் பங்களாதேஷ் அணி 39 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.

ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஸிம்பாப்வே அணிகளுக்கிடையேயான 20க்கு 20 முக்கோண தொடரின் 4ஆவது போட்டி சிட்டொக்ராமில்  நேற்று இடம்பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து 176 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய ஸிம்பாப்வே அணி, 20 ஓவர்கள் நிறைவில் 136 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.