உலக கிண்ண றக்பி போட்டி..

Friday, 20 September 2019 - 9:47

+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3+%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF..
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் சுற்றுப் போட்டியின் போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து, பாகிஸ்தானிய பாதுகாப்பு தரப்பினர் இலங்கைக்கு விளக்கமளித்துள்ளனர்.

சிறிலங்கா கிரிக்கட்டின் குழு ஒன்று பாகிஸ்தான் - பஞ்சாப் நகர காவற்துறை தலைமையகத்துக்கு சென்று இதுதொடர்பான ஆய்வினை மேற்கொண்டுள்ளது.

இதன்படி பாதுகாப்பு நடவடிக்கைகளில் திருப்தி கொண்டுள்ள சிறிலங்கா கிரிக்கட், திட்டமிடபடி பாகிஸ்தானுக்கான இலங்கையின் சுற்றுப் பயணத்தை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளது.

சிறிலங்கா கிரிக்கட் உத்தியோகபூர்வமாக நேற்று இதனை அறிவித்தது.

இதேவேளை உலக கிண்ண றக்பி போட்டி இன்றைய தினம் ஆரம்பிக்கவுள்ளது.

குறித்த போட்டி ஜப்பானில் இடம்பெறவுள்ளது.