இலங்கை மகளிர் கிரிக்கட் அணி நாளை அவுஸ்திரேலியா பயணம்..!

Saturday, 21 September 2019 - 14:18

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D..%21
அவுஸ்திரேலியாவிற்கான சுற்றுலாவை மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 20க்கு இருபது போட்டிகளில் இலங்கை மகளிர் கிரிக்கட் அணி பங்கேற்கவுள்ளது.

இந்த தொடருக்கான இலங்கை மகளிர் கிரிக்கட் அணி வீராங்கனைகள் குழாம் தற்போது பெயரிடப்பட்டுள்ளது.

அதன்படி, சஷிகலா சிறிவர்தன இலங்கை மகளிர் அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான தலைவராகவும், சமரி அத்தபத்து இலங்கை அணியின் 20க்கு இருபது போட்டிகளுக்கான தலைவராவும் நியமிக்கப்பட்டுளனர்.

இந்த இருவகையான போட்டிகளிலும் சமரி அத்தபத்து பங்கேற்கவுள்ளமை விசேட அம்சமாகும்.

இந்நிலையில், ஐசிசி 20க்கு இருபது உலகக்கிண்ண தொடருக்கு பின்னர் யசோத மென்டிஸ் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ள அதேவேளை, தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து தொடரில் பங்கேற்காத அமா காஞ்சனாவும் இரு வகையான போட்டிகளுக்கான அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.

நாளை இலங்கையிலிருந்து புறப்படவுள்ள இலங்கை மகளிர் கிரிக்கட் அணி, எதிர்வரும் 29 ஆம் திகதி முதலாவது 20க்கு இருபது போட்டியில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ளது.