2 வது தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்ற கரோலினா மரின்

Sunday, 22 September 2019 - 18:10

2+%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D
சீனா ஓபன் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கரோலினா மரின், சீன-தைபேயைச் சேர்ந்த தாய் ஜு யிங்கை எதிர்கொண்டார்.

முதல் செட்டை தாய் ஜு யிங் 14-21 என எளிதில் வென்றார். 2 வது சுற்றில் சுதாரித்துக் கொண்ட கரோலினா 2 வது மற்றும் 3 வது சுற்றில் அபாரமாக விளையாடினார்.

தாய் ஜு ஜிங் நெருக்கடி கொடுத்தாலும் கரோலினா மரின் 2 வது செட்டை 21-17 எனவும், 3 வது செட்டை 21-18 எனவும் கைப்பற்றி சாதனைப் படைத்தார்.

8 மாதங்களாக காயத்தால் விளையாடாமல் இருந்த கரோலினா மரினுக்கு காயத்தில் இருந்து மீண்ட பிறகு 2 வது தொடர் இதுவாகும்.

2 வது தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்றுள்ளமை விசேட அம்சமாகும்.