மூன்றாவது 20க்கு 20 போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி

Monday, 23 September 2019 - 7:32

%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+20%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+20+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 9 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

இதன்படி, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்தநிலையில், 135 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி 16.5 ஓவர்கள் நிறைவில் 1 விக்கட்டை மாத்திரமே இழந்து போட்டியின் வெற்றியிலக்கை கடந்தது.

இதன்மூலம் இந்த தொடர் 1க்கு 1 என சமநிலையில் முடிவடைந்துள்ளது.

போட்டியின் ஆட்டநாயகனாக பெவ்ரன் ஹென்ரிக்ஸ் தெரிவானதோடு தொடரின் நாயகனாக குயின்டன் டி கொக் தெரிவானமை குறிப்பிடத்தக்கது.