நாளை பாகிஸ்தான் செல்ல உள்ள இலங்கை அணி..

Monday, 23 September 2019 - 20:20

+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF..
ஒரு நாள் மட்டும் இருபதுக்கிருபது போட்டிகளுக்காக இலங்கை அணி நாளை பாகிஸ்தான் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,சுற்றுலா பங்களாதேஷ்  அணிக்கும் இலங்கை  அணிக்கும் இடையேயான முதலாவது உத்தியோகபற்றற்ற டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் காலநிலை சீர்கேடு காரணமாக நடைபெறவில்லை.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலைய விளையாட்டு திடலில் நான்கு நாள் போட்டியாக இன்று முதல் நடைபெறவிருந்தது.

அதேவேளை இரண்டாவது டெஸ்ட் போட்டி காலியில் எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

இது தவிர இந்த அணிகளுக்கு இடையேயான மூன்று ஒரு நாள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளும் நடைபெறவுள்ளன.

முதல் இரண்டு போட்டிகள் ஹம்பாந்தோட்டை விளையாட்டு திடலிலும் மூன்றாவதும் இறுதியுமான போட்டி கொழும்பிலும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.