20க்கு 20 தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம்...

Saturday, 12 October 2019 - 13:52

20%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+20+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D...

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான 20க்கு 20 தொடரை அடுத்து சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) 20க்கு 20 அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, பாகிஸ்தான் அணியுடனான தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்ததன் காரணமாக இலங்கை அணி தரவரிசைப் பட்டியலில் 8ஆவது இடத்திலிருந்து 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இருப்பினும் இலங்கையுடனான 20க்கு 20 தொடரை 3க்கு 0 என்ற கணக்கில் பாகிஸ்தான் இழந்தாலும் கூட புள்ளிப்பட்டியலில் தொடர்ந்தும் அவ்வணி முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.