ஹகிபிஸ் சூறாவளி காரணமாக ஒரு போட்டி இரத்து..!

Sunday, 13 October 2019 - 7:18

%E0%AE%B9%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81..%21
உலகக் கிண்ண ரக்பி தொடரின் தகுதிகாண் சுற்றுப் போட்டிகள் இன்றுடன் நிறைவடைய உள்ளன.

இந்த நிலையில், இன்று இடம்பெறவுள்ள 4 போட்டிகளில், ஹகிபிஸ் சூறாவளி காரணமாக ஒரு போட்டி இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

கனடா மற்றும் நமிபியா அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெறவிருந்த போட்டியே இவ்வாறு இரத்தாகியுள்ளது.

இதேநேரம், அமெரிக்கா மற்றும் ரொங்கா, வேல்ஸ் மற்றும் உருகுவே, ஜப்பான் மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிகள் இடம்பெறவுள்ளன.

தகுதிகாண் சுற்றிலிருந்து இங்கிலாந்து, நியூஸிலாந்து, ப்ரான்ஸ் மற்றும் தென்னாபிரிக்க அணிகள் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன.

இந்த நிலையில், இன்று இடம்பெறும் போட்டிகளின் அடிப்படையில் மேலும் நான்கு அணிகள் காலிறுதிக்கு தெரிவாகவுள்ளன.

கடந்த மாதம் 20 ஆம் திகதி ஜப்பானில் ஆரம்பமான 2019 உலகக் கிண்ண ரக்பி தொடரின் காலிறுதிப் போட்டிகள் எதிர்வரும் 19ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.

இதையடுத்து, 26ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் அரையிறுதிப் போட்டிகளும், நவம்பர் மாதம் 2ஆம் திகதி இறுதிப் போட்டியும் இடம்பெறவுள்ளது.