இந்திய அணியின் புதிய சாதனை..

Monday, 14 October 2019 - 8:33

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88..
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 11 டெஸ்ட் தொடர்களை வென்ற அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

நேற்றுடன் நிறைவடைந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இதன்மூலம் 2க்கு0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்தத் தொடரை வென்றதன் மூலம் 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் 2019 அக்டோபர் மாதம் வரை இந்தியா தொடர்ச்சியாக 11 தொடர்களை வென்று சாதனைப் படைத்துள்ளது.

இதற்கு முன் அஸ்திரேலியா 1994 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2000 ஆம் ஆண்டு நவம்பர் வரை தொடர்ச்சியாக 10 தொடர்களையும், 2004 ஆம் ஆண்டு ஜூலை முதல் 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை 10 தொடர்களையும் வென்றிருந்தது.

இந்தநிலையில் இந்தியா அணி அவுஸ்திரேலிய அணியை பின்தள்ளி முதலாம் இடத்தை பிடித்துள்ளது.