இருதரப்பு உறவுகள் மீள ஆரம்பம்...?

Friday, 18 October 2019 - 13:28

%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D...%3F
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் புதிய தலைவராக தெரிவாகியுள்ள சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

சவுரவ் கங்குலி, எதிர்வரும் 23 திகதி தமது கடமைகளைப் பொறுப்பேற்க உள்ளார்.

இந்த நிலையில், ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ள கங்குலி, இந்த யோசனைக்கு இரு நாடுகளின் பிரதமர்களின் அனுமதி தேவை எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் கடந்த 2012ஆம் ஆண்டு இந்தியாவில், இரண்டு 20க்கு 20 மற்றும் மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகளைக் கொண்ட தொடர் இடம்பெற்றது.

கார்கில் போருக்குப் பின்னர் முதல் இருதரப்பு தொடர் 1999ஆம் ஆண்டும், இந்தியாவின் முதலாவது பாகிஸ்தான் பயணம் 1989ஆம் ஆண்டும் இடம்பெற்றது.

கடந்த பெப்ரவரி மாதம் 14ம் திகதி ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, பயங்கரவாதம் வெளிப்படும் நாடுகளுடன் உறவுகளைத் துண்டிக்குமாறு சர்வதேச கிரிக்கட் பேரவையிடம், இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை கோரியிருந்தது.

இந்த நிலையில், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இரு நாடுகளின் பிரதமர்களின் அனுமதி தேவை சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.