சப்ராஸ் அகமட் தலைவர் பதவியில் இருந்து நீக்கம்..

Friday, 18 October 2019 - 21:38

%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D..
பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் மற்றும் இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டிகளின் தலைவராக செயல்பட்ட சப்ராஸ் அகமட்  குறித்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தானிய கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.

இது தவிர எதிர்வரும் நவம்பர் மற்றும் டிசெம்பர் மாதங்களில் அவுஸ்திரேலியாவுடனான தொடரிலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற போட்டிகளில் அவர் திறமையினை வெளிப்படுத்த தவறிவிட்டார் என குற்றஞ்சாட்டப்பட்டே இந்த இரு வகையான போட்டிகளிலும் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அவர் பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைவராக அசார் அலி தெரிவாகியுள்ள நிலையில் பாபர் அசாம் 20 இற்கு 20 போட்டிகளின் தலைவராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.