இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 497 ஓட்டங்கள்

Sunday, 20 October 2019 - 13:46

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+497+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சி மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 224 ஓட்டங்களை பெற்றிருந்தது. போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் 58 ஓவர்களுடன் நிறைவுக்கு வந்திருந்தது.

இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ரஹானே இன்று தனது 6வது சதத்தை பெற்றுக்கொண்டார். அவர் 115 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி வந்த ரோஹித் சர்மா தனது முதலாவது இரட்டைச் சதத்தை பதிவு செய்தார். அவர் 255 பந்துகளில் 212 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பாடிவரும் இந்திய அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 497 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டுள்ளது.