இரண்டாவது நாளில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா..!

Sunday, 20 October 2019 - 19:03

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE..%21
இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நிறைவு பெற்றுள்ளது.

போட்டியில் தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் தென்னாபிரிக்கா அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவு வரை 2 விக்கட்டுக்களை இழந்து 9 ஓட்டங்களை பெற்றுள்ளது.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 9 விக்கட்டுக்களை இழந்து 497 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடை நிறுத்தி கொண்டது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக ரோஹித் சர்மா இரட்டை சதம் அடங்கலாக 212 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.