இலங்கை அணியின் புதிய பயிற்சியாளர்கள் இவர்களா..?

Monday, 21 October 2019 - 12:07

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE..%3F+
இலங்கை அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மார்க் ராம்பிரகாஷ் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்க அவர் ஆர்வமாக இருப்பதாகவும் ஸ்ரீ லங்கா கிரிக்கட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

50 வயதாகும் ராம்பிரகாஷ் இங்கிலாந்தின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2350 ஓட்டங்களை குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு இங்கிலாந்தின் பிராந்திய அணிகளுக்கும் பயிற்சியாளராக செயற்பட்டுள்ளார்.

மிடில்செக்ஸ் மற்றும் சரே போன்ற பிரபலமான பிராந்திய அணிகளில் விளையாடியுள்ள இவர், 461 போட்டிகளில் 114 சதங்கள், 147 அரைச்சதங்கள் உள்ளடங்களாக 35,569 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், ராம்பிரகாஷ் நியமனம் குறித்து ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவன அதிகாரிகளின் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தற்போது இலங்கை அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், குறித்த தொடரை நிறைவு செய்ததன் பின்னர் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக அவுஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரட் லீ நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

42 வயதான பிரட் லீ அவுஸ்திரேலிய அணிக்காக 76 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 310 விக்கெட்டுக்களையும் 221 ஒருநாள் போட்டிகளில் கலந்துகொண்டு 380 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார். தற்போது இவர் கிரிக்கட் வர்ணனையாளராக கடமையாற்றி வருகின்றார்.

இந்நிலையில், தற்போது இலங்கை அணியின் தற்காலிக வேகப்பந்து வீச்சு மற்றும் தற்காலிக தலைமை பயிற்சியாளராக ருமேஸ் ரத்னாயக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.