திட்டமிட்டிருந்த போட்டிகள் நடைபெறாது..

Monday, 21 October 2019 - 20:50

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81..
பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே இந்தியாவில் நடைபெற திட்டமிட்டிருந்த போட்டிகள் நடைபெறாது என பங்களாதேஷ் டெஸ்ட் மற்றும் 20 இற்கு 20 போட்டிகள் அணியின் தலைவர் ஷஹீப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தமது 11 அம்ச கோரிக்கை ஏற்றுக்கொள்ள படாத பட்சத்தில், பங்களாதேஷ் அணியையை சேர்ந்த உறுப்பினர்கள் எந்தவொரு கிரிக்கட் போட்டிகளிலும் கலந்து கொள்ள மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் மூன்று 20 இற்கு 20 போட்டிகளும் இரண்டு டெஸ்ட் போட்டிகளும்  இந்தியாவில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பங்களாதேஷ் பிரிமியர் அணியிலும் குறைந்தது ஒரு சுழல் பந்து வீச்சாளர் இணைக்கப்பட வேண்டும் என்ற புதிய நிபந்தனை ஒன்றை விதித்திருந்தது.

இந்த புதிய நிபந்தனைக்கு கட்டுப்படாத இரு பிரிமியர் லீக் அணிகளின் தலைமை பயிற்றுவிப்பாளர்கள், பங்களாதேஷ் கிரிக்கட் சபையினால் இடைநிறுத்தப்பட்டனர்.

அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நிபந்தனை பங்களாதேஷ் கிரிக்கட்டாளர்களை ஒடுக்கும் நடவடிக்கை என ஷஹீப் அல் ஹசன் இன்றைய ஊடக சந்திப்பில் விசனம் தெரிவித்துள்ளார்.