இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 202 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தின் போது ஃபளோஓன் முறையில் அதன் இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 133 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.
முன்னதாக இந்த போட்டியில் இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 9 விக்கட்டுகளை இழந்து 497 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில், ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
தென்னாப்பிரிக்கா அணி அதன் முதல் இனிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 162 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் ரோஹித் சர்மா தெரிவானார்.