அவசர கூட்டத்தில் பங்களாதேஷ் கிரிக்கட் சபை...

Tuesday, 22 October 2019 - 19:18

%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88...
பங்களாதேஷ் கிரிக்கட் சபையின் அவசர கூட்டம் ஒன்று கூட்டப்படுகிறது.

அந்த நாட்டின் கிரிக்கட் வீரர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த, பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

அவர்கள் எதிர்வரும் கிரிக்கட் போட்டிகளில் விளையாடப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.

இந்தியாவிற்கு எதிரான தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ம் திகதி ஆரம்பமாகின்ற நிலையில், இன்னும் 48 மணித்தியாலங்களில் இந்த பிரச்சினைக்கு பங்களாதேஷ் கிரிக்கட் சபை தீர்வினை முன்வைக்க வேண்டும்.

இந்த நிலையில் இதுதொடர்பாக ஆராய்வதற்காக பாகிஸ்தான் கிரிக்கட் சபையின் பணிப்பாளர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்றுக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

கிரிக்கட் வீரர்களுக்கான கொடுப்பனவு உள்ளிட்ட 11 விடயங்கள் முன்வைத்து பங்களாதேஷ் கிரிக்கட் சபை போராட்டத்தை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.