அவுஸ்திரேலியா அணி வெற்றி

Wednesday, 06 November 2019 - 9:19

%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+
ஆப்கானிஸ்த்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
 
 இந்த போட்டி இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
 
இதேவேளை,  பாக்கிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் அவுஸ்திரேலியா அணி 7 விக்கட்களினால் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாக்கிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கட்களை இழந்து 150 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 18.3 ஒவர்களில் 3 விக்கட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.