7 விக்கெட்டுக்களினால் மே.இந்திய தீவுகள் அணி வெற்றி

Wednesday, 06 November 2019 - 21:24

7+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87.%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் 7 விக்கெட்டினால் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 45.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 195 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் ரஹ்மட் ஷா 61 ஓட்டங்களையும் இக்ராம் அலிகில் 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் ஹோல்டர்,ஷேபர்ட் மற்றும் சேஸ் ஆகியோர் தலா இவ்விரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இந்நிலையில் 196 என்ற வெற்றி இலக்கோடு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகளுக்கு சேஸ் 94 மற்றும் ஹொப் 77 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க 46.3 ஓவர்கள் நிறைவில் அவ்வணி 3 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சில் முஜீப் ஹூர் ரஹ்மான் இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக சேஸ் தெரிவுசெய்யப்பட்டார். இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 1க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.