தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து அணி..

Sunday, 10 November 2019 - 13:08

+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81++%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF..
நியூஸிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட 20க்கு 20 தொடரை 3க்கு 2 என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

முன்னதாக நிறைவடைந்திருந்த 4 போட்டிகளில் தலா 2 போட்டிகளில் வெற்றிபெற்று இரு அணிகளும் 2க்கு 2 என்ற அடிப்படையில் சமநிலையில் இருந்தன.

இந்த நிலையில், இன்றைய இறுதிப் போட்டி, மழை காரணமாக 11 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி, 11 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 147 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி, 11 ஓவர்கள் நிறைவில், 7 விக்கட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றது.

இதன் காரணமாக போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

இதையடுத்து, இடம்பெற்ற சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 17 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர், 18 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய நியூஸிலாந்து அணி, 8 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.