ATP சர்வதேச டென்னிஸ் சம்பியனாக சிட்சிபாஸ்

Monday, 18 November 2019 - 18:50

ATP+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D
ATP சர்வதேச டென்னிஸ் போட்டியின் இறுதி போட்டியில் கிறீசை சேர்ந்த சிட்சிபாஸ், ஒஸ்ரியாவை சேர்ந்த டொமினிக் தீம்மை தோற்கடித்து வெற்றி கிண்ணத்தை சுவீகரித்துள்ளார்.

சர்வதேச ரீதியாக சிறந்த எட்டு டெனிஸ் ஆட்டக்காரர்கள் பங்கு கொண்ட ATP இறுதிச் சுற்று லண்டனில் நடைபெற்றது.

ஸ்பெயினை சேர்ந்த நடால், சுவிஸ்சலாந்தை சேர்ந்த ரொஜர் பெடரர், சேர்பியாவை சேர்ந்த ஜோகோவிச் ஆகியோரை பின்தள்ளிய நிலையில் இவர்கள் இறுதி போட்டிக்கு முன்னேறியிருந்தனர்.

இரண்டு மணி 35 நிமிட நேரம் நீடித்த இறுதி போட்டியில் 21 வயதான சிட்சிபாஸ் 6-7, 6-2, 7-6 என்ற நேர் செட் கணக்கில் டொமினிக் தீம்மை தோற்கடித்து இந்த வெற்றியை பெற்றார்.

அவர் ஏற்கனவே அரை இறுதி போட்டியில் ரோஜர் பெடரரை தோற்கடித்து இருந்தார்.

இந்த நிலையில், இளம் 21 வயதில் வெற்றியை பெற்ற இரண்டாவது வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.