நிக்கோலஸ் பூரன் தனது தவறை திருத்தி மீண்டும் பயணிப்பார்..

Tuesday, 19 November 2019 - 7:47

%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D..
பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் தடைவிதிக்கப்பட்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிவீரர் நிக்கோலஸ் பூரன் தனது தவறை திருத்தி மீண்டும் பயணிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர் ஸ்டீவன் ஸ்மித் இதனை தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் நிக்கோலஸ் பூரன் பந்தை சேதப்படுத்தியமை கண்டறியப்பட்டுள்ளதுடன் அவருக்கு நான்கு போட்டிகளில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த பிரச்சினையில் இருந்து மீண்டு வலுவான வீரராக அவர் என ஸ்டீவன் ஸ்மித், நிக்கோலஸ் பூரனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

அவருக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது.

அவர் அந்த தவறில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, அதில் இருந்து கடந்து செல்வார் என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.