பாகிஸ்தான்அணி 240 ஓட்டங்கள்

Thursday, 21 November 2019 - 19:51

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF++240+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+
சர்வதேச கிரிக்கட் பேரவையின் டெஸ்ட் சாம்பியன்ஸிப் தொடருக்கான பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி பிரிஸ்பேனில் இன்று ஆரம்பமானது.
 
நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.
 
இதன்படி இன்றைய ஆட்ட நேரம் நிறைவடையும் போது, பாகிஸ்தான் 240 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது.
 
மிச்சல் ஸ்டாக் 4 விக்கட்டுகளை வீழ்த்தினார்.
 
அதேநேரம் இங்கிலாந்து மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.
 
இன்றைய ஆட்ட நேரம் நிறைவடையும் போது, இங்கிலாந்து 4 விக்கட்டை இழந்து 241 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.