அவுஸ்திரேலிய அணி 589 ஓட்டங்கள்..

Sunday, 01 December 2019 - 13:13

%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+589+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..
அவுஸ்திரேலியா மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகிறது.

அடிலைட் ஓவல் விளையாட்டு திடலில் நடைபெறும் போட்டியில் பாக்கிஸ்தான் அணி தமது முதலாவது இன்னிங்சிற்காக விளையாடி வருகின்றது.

பாக்கிஸ்தானிய அணி சற்று முன் வரை 8 விக்கட்டுக்களை இழந்து 275 ஓட்டங்களை பெற்ற நிலையில் உள்ளது.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 3 விக்கட்டுக்களை இழந்து 589 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.