சமநிலையை நோக்கி நகரும் இரண்டாவது டெஸ்ட் போட்டி

Monday, 02 December 2019 - 11:56

%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF
இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.

இன்றைய தினம் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 476 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.

அவ்வணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஜோய் ரூட் 226 ஓட்டங்களையும், பர்ன்ஸ் 101 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் வாக்னர் 5 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

இந்நிலையில், தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் நியூசிலாந்து அணி இன்றைய நான்காம் நாள் ஆட்டநேர நிறைவில் 2 விக்கட்டுக்களை இழந்து 96 ஓட்டங்களை பெற்றுள்ளது. கேன் வில்லியம்சன் 37 ஓட்டங்களுடனும் டெய்லர் 31 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 375 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.