தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் இலங்கை சாதனை..

Monday, 02 December 2019 - 21:10

%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88..
நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்று வரும் 13 ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் இலங்கை தமது முதலாவது தங்க பதக்கத்தை வென்றுள்ளது.

17 வயது முதல் 23 வயதிற்கு இடையிலான பிரிவில் ஆண்களுக்கான தாய்குண்டோ தற்காப்பு போட்டியில் ரனுக பிரபாத் இந்த தங்க பதக்கத்தை வென்றுள்ளார்.

இதனுடன் பெண்களுக்கான கராத்தே போட்டியில் ஹங்சிகா ஹேசானி ஹெட்டியாரச்சி வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்.

இதேவேளை ஆண்களுக்கான கராத்தே போட்டியில் சௌந்தர்ராசா பாலுராஜ் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்.

இதன்படி இலங்கை ஒரு தங்கப்பதக்கத்துடன் மூன்று வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.