இலங்கைக்கு மற்றுமொரு தங்கப்பதக்கம்

Wednesday, 04 December 2019 - 14:03

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு இன்று மற்றுமொரு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.

பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியிலேயே மேற்படி தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.

இதில் சாரங்கி சில்வா தங்கப்பதக்கத்தையும், அஞ்சானி புல்வங்ஷ வெள்ளிப்பதக்கத்தையும் வெற்றி கொண்டனர்.

200 மீற்றர் ஓட்டப்போட்டியில் பங்குபற்றிய வினோத் சுரங்ஜய சில்வா வெள்ளிப்பதக்கத்தை வெற்றி கொண்டதோடு, தட்டு எறிதல் போட்டியில் இஷாரா மதுரங்கி வெண்கலப் பதக்கத்தையும் வெற்றி கொண்டார்.

இதுவரையில் 6 தங்ம், 16 வெள்ளி, 28 வெண்கலப் பதக்கங்களை பெற்று பதக்கப்பட்டியலில் 3வது இடத்தில் இலங்கை உள்ளது.

குறித்த பட்டியலில் நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முதலிரண்டு இடங்களை பெற்றுள்ளன.