வெள்ளிப் பதக்கம் வென்றார் குமார் சண்முகேஸ்வரன்

Wednesday, 04 December 2019 - 19:32

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D
நேபாளம் - காத்மண்டுவில் நடைபெற்றுவரும் 13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் 10,000 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஹட்டனைச் சேர்ந்த குமார் சண்முகேஸ்வரன் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

10,000 மீற்றர் ஓட்டப் போட்டியின் தேசிய சம்பியனான சண்முகேஸ்வரன், சர்வதேச போட்டித் தொடர் ஒன்றில் இலங்கை சார்பாக பெற்றுக் கொண்ட இரண்டாவது பதக்கம் இதுவாகும்.

முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற வியட்நாம் பகிரங்க மெய்வல்லுனர் போட்டித் தொடரில் சண்முகேஸ்வரன் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.