டெஸ்ட் கிரிக்கட் தொடரில் இருந்து நீக்கப்பட்டார் சுரங்க லக்மால்..

Sunday, 08 December 2019 - 20:00

%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D..
டெங்கு நோய் தொற்று காரணமாக இலங்கை அணியின் வேகபந்து வீச்சாளர் சுரங்க லக்மால் பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் கிரிக்கட் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக வேகபந்து வீச்சாளரான அசித்த பெர்ணான்டோ அணிக்கு உள்வாங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி இன்று மாலை நாட்டிலிருந்து புறப்படவுள்ளது.

2009 ஆம் ஆண்டு இலங்கை அணியை இலக்கு வைத்து லாகூர் நகரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் வேகபந்து வீச்சாளர் சுரங்க லக்மால் காயமடைந்திருந்தமை குறிப்பிடதக்கது.