மூன்றாம் நாள் ஆட்டம் இன்று

Friday, 13 December 2019 - 8:38

%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடி வரும் இலங்கை அணி, நேற்றைய ஆட்ட நேரம் நிறைவடையும் போது தமது முதல் இன்னிங்ஸில் 6 விக்கட்டுகளை இழந்து 263 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

தனஞ்சய டி சில்வா 72 ஓட்டங்களும் ஆட்டமிழக்காதுள்ளார்.

சஹீன் சா அஃபரிடி மற்றும் நசீம் சா ஆகியோர் தலா இவ்விரண்டு விக்கட்டுகளை கைப்பற்றினர்.

இதேவேளை, சர்வதேச கிரிக்கட் பேரவையின் டெஸ்ட் சாம்பியன்சிப் தொடருக்கு அமைவாக, அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலியா தமது முதல் இன்னிங்ஸில் 4 விக்கட்டுகளை இழந்து 248 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் உள்ளது.

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.

பேர்த்தில் பகல் இரவாக நடைபெறும் இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா, முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

இந்த போட்டியின் முதல்நாள் ஆட்டம் நேற்று நிறைவடையும் போது, அவுஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஸ்சேஞ்ச் 110 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காதிருந்தார்.