166 ஓட்டங்களுக்கு சுருண்டது நியூசிலாந்து

Saturday, 14 December 2019 - 12:54

166+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
அவுஸ்திரேலியா மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகிறது.

போட்டியில் தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பாடிய நியுஸிலாந்து அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 166 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்த போட்டியில் முன்னதாக துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி அதன் முதல் இனிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 416 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.