மூன்றாவது போட்டியின் வெற்றியுடன் இருபதுக்கு 20 தொடர் இங்கிலாந்து வசம்..!

Sunday, 16 February 2020 - 22:04

%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+20+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D..%21
இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

சென்சூரியனில் இடம்பெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதன்படி அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 226 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக க்ளாசென் 66 ஓட்டங்களையும் புவாமா 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இதனையடுத்து, 227 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி பேர்ஸ்டோவின் 64 மற்றும் இயன் மோர்கனின் அதிரடியான 57 ஓட்டங்களுடன் 19.1 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.

இதன்படி, 3 போட்டிகளை கொண்ட இருபதுக்கு 20 தொடரை இங்கிலாந்து அணி 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் இங்கிலாந்து அணியின் தலைவர் இயன் மோர்கன் தெரிவானார்.