உபாதைக்கு உள்ளான இலங்கை மகளிர் அணியின் முக்கிய வீராங்கனை..!

Monday, 17 February 2020 - 10:28

%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88..%21+
இருபதுக்கு 20 மகளிர் உலகக்கிண்ண தொடரின் பயிற்சி போட்டிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் நேற்று இடம்பெற்ற பயிற்சி போட்டியொன்றின் போது இலங்கை மகளிர் கிரிக்கட் அணியின் அசினி குலசூரிய பந்து தலையில் தாக்கி காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அடிலெட் மைதானத்தில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான பயிற்சி போட்டியின் போதே அசினி குலசூரிய இவ்வாறு காயமடைந்துள்ளார்.

இருப்பினும், குறித்த சம்பவத்தை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுள்ளார். இதனையடுத்து இடம்பெற்ற விசாரணைகளையடுத்து அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.