ஐ.பி.எல். ரசிகர்களுக்கான ஓர் விசேட செய்தி....!

Saturday, 23 May 2020 - 20:07

%E0%AE%90.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF....%21
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகக் கிண்ண 20 க்கு 20 கிரிக்கட் தொடரை நடத்த முடியாத நிலை ஏற்பட்டால், இந்தியன் ப்றீமியர் லீக் தொடரை நடத்துவது குறித்து அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

உலகக் கிண்ண 20 க்கு 20 தொடர் திட்டமிட்டவாறு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் மிகக் குறைவாக உள்ளது என அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் இயன் செப்பல் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

எனவே, காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள இந்தியன் ப்றீமியர் லீக் தொடரை நடத்துவதற்கு இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை விரும்பினால், அதற்கான வழியை காணமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், குறித்த விடயம் தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் மார்க் டெய்லர், உலகக் கிண்ண 20 க்கு 20 தொடரின் எதிர்காலம் மற்றும் தற்போதைய நிலை என்பனவற்றுக்கு இடையில், ஐ.பி.எல் சிறந்த தெரிவாகும் என தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ண தொடருக்காக 15 அணிகள் அவுஸ்திரேலியாவுக்கு பயணிக்க வேண்டும்.

எனினும், ஐ.பி.எல் தொடரைப் பொருத்தவரையில், அதற்காக பயணிப்பதா? இல்லையா? என்பது தனிநபரின் தெரிவாக இருக்கும் என மார்க் டெய்லர் கூறியுள்ளார்.


மாற்றுத் திட்டமொன்றை அறிவிக்குமாறு கோரும் ஜஸ்ப்பிரிட் பும்ரா..!
Wednesday, 03 June 2020 - 14:09

சர்வதேச போட்டிகளின் போது பந்துவீச்சாளர்கள் பந்தில் உமிழ்நீர்... Read More

மே.இந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடருக்கான கால அட்டவணை வெளியீடு
Tuesday, 02 June 2020 - 21:31

மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடருக்கான கால அட்டவணையை... Read More

ஏ.பி.டி வில்லியர்ஸ் புகழ்ந்து தள்ளிய தென்னாபிரிக்க முன்னாள் வீரர்..!
Tuesday, 02 June 2020 - 19:13

தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் வீரர் ஏ.பி.டி வில்லியர்ஸ்யே... Read More