உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து அணியின் வீரர் ஸ்டுவர்ட் புரோட்

Monday, 29 June 2020 - 19:08

%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D
அடுத்த மாதம் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இங்கிலாந்து அணி சார்பாக விளையாடுவதில் உளவியல் ரீதியாக தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அணியின் வீரர் ஸ்டுவர்ட் புரோட் தெரிவித்துள்ளார்.
 
அணியின் தமது நிலைப்பாடு, அல்லது உடல் தகுதி போன்றவற்றால் தாம் பாதிப்படையவில்லை என தெரிவித்துள்ள அவர், ரசிகர்கள் அற்ற மைதானத்தில் இருக்கைகள் முன் விளையாடுவது சிரமமாக தோன்றும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இது பகுத்தறிவற்ற பயம் என தோன்றுகிற போதிலும், எதிரணியின் பந்து எல்லை கோட்டை நோக்கி செல்லும் பொழுது, வெற்று மைதானத்தில் அதனை துரத்திச் செல்வதனை நினைக்கும் போது கற்பனை செய்த பார்க்க முடியாத நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
பொதுவாக தான் பங்குகொள்ளும் போட்டிகளின் போது தமது ஒவ்வொரு அசைவினையும் ரசிகர்கள் பாராட்டுவது மறக்க முடியாத நிகழ்வெனவும் அவர் குறிப்பிட்டார்.
 
ரசிகர் கூட்டத்திற்கு மத்தியில் தம்மால் வழங்கப்பட்ட இலவச உள்நுழைவு சீட்டை பெற்றவர்களும் ரசிகர்கள் மத்தியில் இருப்பர் என்பது மகிழ்ச்சியான விடயம் எனவும் அவர் தெரிவித்தார்.
 
இந்த நிலையில், மூன்று டெஸ்ட் போட்டிகளும் நிறைவடைந்ததன் பின்னரே தமது அனுபவத்தை அறிய முடியும் எனவும் ஸ்டுவர்ட் புரோட் தெரிவித்துள்ளார்.
 
அதேவேளை, இங்கிலாந்துடனான மூன்று டெஸ்ட் போட்டிகளின் போதும், மேற்கு இந்திய அணி வீரர்கள் அனைவரும் மரணமான கறுப்பு இன ஜோஜ் புளைட்டினை கௌரவிக்கும் வகையில், தமது மேல்சட்டையில் விசேட சின்னம் ஒன்றினை அணிந்திருப்பர் என “கிரிக்கட் வெஸ்ட் இன்டீஸ்” அறிவித்துள்ளது.


முதல் நாள் ஆட்டம் நேற்று..!
Thursday, 09 July 2020 - 9:58

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்ட்டிருந்த... Read More

தல தோனிக்கு கிடைத்த பிறந்த நாள் பரிசு...!
Wednesday, 08 July 2020 - 15:37

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பொறுப்பதிகாரியாக அந்த அணி... Read More

ரஜினி ஸ்டைலில் எம்எஸ் டோனிக்கு மாஸ் காட்டிய அனிருத்: வைரலாகும் வீடியோ
Wednesday, 08 July 2020 - 14:31

எம்எஸ் டோனிக்கு ரஜினி அறிமுக மியூசிக் மூலம் பிறந்த நாள்... Read More