நாளை முதல் பயிற்சி நடவடிக்கைகள் ஆரம்பம்

Tuesday, 30 June 2020 - 8:37

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
இங்கிலாந்தில் பிராந்திய கிரிக்கட் போட்டிகளை ஓகஸ்ட் முதலாம் திகதி ஆரம்பிப்பதற்கு அந்நாட்டு கிரிக்கட் சபை அனுமதி வழங்கியுள்ளது.
 
இதன் முதற்கட்டமாக நாளை தொடக்கம் பயிற்சி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
 
இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக இடைநிறுத்தப்பட்ட கிரிக்கட் விளையாட்டு போட்டிகள் மீள படிப்படியாக ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளன.
 
இந்தநிலையில், தென் ஆபிரிக்க அரசாங்கம், “கிரிக்கட் தென் ஆபிரிக்கா” வின் வேண்டுகோளுக்கு அமைய பயிற்சி மற்றும் விளையாட்டு திட்டங்களுக்கான அனுமதியினை வழங்கியுள்ளது.
 
இதன்படி “கிரிக்கட் தென் ஆபிரிக்கா” மீண்டும் தமது பயிற்சி நடவடிக்கைகளை எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன்போது தென் ஆபிரிக்காவின் ஆண்கள் மற்றும் மகளீர் கிரிக்கட் அணிகள் தமது பயிற்சி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளன.
 
அதேவேளை, முக்கோண கிரிக்கட் போட்டிகள் உடனடியாக ஆரம்பிக்கப்படுவதற்கான ஏதுநிலை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி நடைபெறவிருந்த முக்கோண போட்டிகளை “கிரிக்கட் தென் ஆபிரிக்கா” பிற்போட்டிருந்தமை குறிப்பிடதக்கது.


முதல் நாள் ஆட்டம் நேற்று..!
Thursday, 09 July 2020 - 9:58

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்ட்டிருந்த... Read More

தல தோனிக்கு கிடைத்த பிறந்த நாள் பரிசு...!
Wednesday, 08 July 2020 - 15:37

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பொறுப்பதிகாரியாக அந்த அணி... Read More

ரஜினி ஸ்டைலில் எம்எஸ் டோனிக்கு மாஸ் காட்டிய அனிருத்: வைரலாகும் வீடியோ
Wednesday, 08 July 2020 - 14:31

எம்எஸ் டோனிக்கு ரஜினி அறிமுக மியூசிக் மூலம் பிறந்த நாள்... Read More