BCCIயிடம் சஞ்சய் மஞ்சேக்கர் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

Saturday, 01 August 2020 - 19:54

BCCI%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
மீண்டும் வர்ணணையாளராக தம்மை இணைத்துக்கொள்ளுமாறு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் சஞ்சய் மஞ்சேக்கர் கோரியுள்ளார்.

இது தொடர்பாக கோரிக்கை அடங்கிய கடிதம் ஒன்றை அவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு அனுப்பியுள்ளார்.

வர்ணணையாளர் குழுவில் பணியாற்றிய சஞ்சய் மஞ்சேக்கர் பல்வேறு சர்ச்சைகளில் பின்னர் அதிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.பி எல் தொடரின் வர்ணணையாளர் குழுவில் தன்னை இணைத்துக்கொள்ளுமாறு அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் இந்திய கட்டுப்பாட்டு சபையின் விதிகளுக்கு அமைவாக செயற்படுவதாகவும் குறித்த கடிதத்தின் ஊடாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் சஞ்சய் மஞ்சேக்கர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.