காலவரையின்றி பிற்போடப்பட்ட போட்டி தொடர்...!

Sunday, 02 August 2020 - 14:22

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D...%21
மேற்கிந்திய தீவுகளுக்கும் இலங்கைக்கும் விஜயம் செய்யவிருந்த தென் ஆபிரிக்க அணியின் திட்டம் தற்போது காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி முன்னர் இந்த மாதம் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஐந்து இருபதிற்கு இருபது போட்டிகளில் பங்கு கொள்ள திட்டமிட்டிருந்தது.

அதேபோல இலங்கையில் மூன்று ஒரு நாள் சர்வதேச போட்டிகளையும் பல இருபதற்கு இருபது போட்டிகளையும் நடத்த திட்டமிட்டிருந்தது.

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், கொரோனா வைரஸ் தொற்று இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளை பாரிய அளவில் தாக்காத போதிலும், தொற்று தொடர்பான அச்சுறுத்தல் தென் ஆபிரிக்காவில் அதிகரித்து வருவதன் காரணமாக, அதனுடனான சர்வதேச எல்லைகள் மூடப்பட்டுள்ளன.

இதன் காரணமாகவே தென் ஆபிரிக்கா திட்டமிடப்பட்டிருந்த இந்த போட்டிகளை காலவரையின்றி பிற்போட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.