மூன்றாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணிக்கு ஆறுதல் வெற்றி

Wednesday, 05 August 2020 - 7:14

%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
சுற்றுலா அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கட் போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

சவுதம்டனில் நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதற்கமைய முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து 49.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 328 ஓட்டங்களை பெற்றது.

இங்கிலாந்து அணி சார்பில் ஒயின் மோகன் 106 ஓட்டங்களை அதிகூடுதலாக பெற்றுக்கொடுத்தார்.

பின்னர் பதிலுக்கு துடுப்பாடிய அயர்லாந்து அணி 49.5 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

அயர்லாந்து அணி சார்பில் போல் ஸ்டிர்லிங் அதிகூடுதலாக 142 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன் அணித்தலைவர் எண்டி பால்பிரின் 113 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

எவ்வாறு எனினும் 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 2 இற்கு 1 என்ற அடிப்பமையில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.







Exclusive Clips