அவுஸ்திரேலியா அணி 3 விக்கட்டுக்களால் வெற்றி

Thursday, 17 September 2020 - 7:54

%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 3 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

மென்செஸ்டரில் நேற்று இடம்பெற்று இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 302 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்தநிலையில், 303 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 49.4 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது.

போட்டியில் அவுஸ்திரேலிய அணி சார்பில் அலக்ஸ் கிரே மற்றும், கிளேன் மெக்ஸ்வெல் ஆகியோர் சதங்களை கடந்தனர்.

அதேநேரம் போட்டி மற்றும் தொடர் ஆட்டநாயகனாக கிளேன் மெக்ஸ்வெல் தெரிவானமை குறிப்பிடத்தக்கது.